நீட் தேர்வு விவகாரத்தில் தமிழ்நாடு அரசு பின்பற்றி வரும் வழிமுறைகளை கர்நாடகாவில் பின்பற்றுவதற்கு ஆலோசித்து வருவதாக அம்மாநில துணை முதல்வர் டி கே சிவகுமார் தெரிவித்துள்ளார். நீ தகுதி தேர்வாள் கர்நாடக மாணவர்கள் வஞ்சிக்கப்படுவதாக கூறியுள்ள அவர் இந்த ஆண்டு அதிக அளவில் முறைகேடு நடந்துள்ளதாக கூறினார். அத்துடன் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கை நியாயமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.