நீட் இளநிலை தேர்வு முடிவுகள் தேர்வு மையம் வாரியாக வெளியாகி உள்ளது. முறைகேடு புகார்களைத் தொடர்ந்து மையங்கள் வாரியாக முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, மாணவர்களின் விவரங்கள் மறைக்கப்பட்டு நகரங்கள், மையங்கள் வாரியாக தேர்வு முடிவுகளை முழுமையாக தேசிய தேர்வு முகமை இணையத்தில் வெளியிட்டுள்ளது. exams.nta.ac.in என்ற தளத்தில் முடிவுகளை அறியலாம்.