நீட் தேர்வை காங்கிரஸ் கொண்டு வரவில்லை என்று தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள அக்கட்சி தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வை கொண்டு வந்தது பாஜக அரசுதான் என்றார். இதுகுறித்து விவாதிக்க தாம் தயாராக இருப்பதாக தெரிவித்த செல்வ பெருந்தகை, உதயநிதி ஸ்டாலின் தமிழக துணை முதல்வராக நியமிக்கப்பட்டால் வரவேற்போம் என்றும் குறிப்பிட்டார்.