இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு, மீண்டும் நடத்தப்படாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நடப்பாண்டு நீட் தேர்வில், வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக புகார் எழுந்த நிலையில், அது தொடர்பாக வழக்குகள் தொடரப்பட்டன. இதனை விசாரித்த நீதிமன்றம், தேர்வை ரத்து செய்யும் அளவுக்கு முகாந்திரம் இல்லை, நீட் தேர்வு நடைமுறையில் விதிமீறல்கள் இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை எனக் கூறியுள்ளது.