கருணை மதிப்பெண் வழங்கப்பட்டவர்களுக்கு நடைபெற்ற நீட் மறு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1563 பேருக்கு ஜூன் 23ஆம் தேதி மறு தேர்வு நடைபெற்றது. இதில் 813 மாணவர்கள் கலந்து கொண்டனர். 750 மாணவர்கள் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் மறுத்தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இதனை மாணவர்கள் www.exams.nta.ac.in/NEET/ என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.