நீட் முறைகேடு விவகாரத்தில் முக்கிய குற்றவாளியை காப்பாற்ற திசை திருப்பும் முயற்சி நடைபெறுவதாக பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பாஜக ஆட்சிக்கு வரும்போது எல்லாம் வினாத்தாள் கசிவது வாடிக்கை என்பது மக்களுக்கு தெரியும் என்றும், தன்னையும் தனது உதவியாளர் பெயரையும் இவ்விவகாரத்தில் இணைத்து பேசுவது யாருக்கும் பயன் அளிக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.