மருத்துவக் கல்வியில் இளங்கலைப் படிப்புகளில் சேர்வதற்காக நடத்தப்பட்ட ‘தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில்’ முறைகேடுகள் தொடர்பாக குஜராத்தில் 7 இடங்களில் சிபிஐ நேற்று சனிக்கிழமை சோதனை நடத்தியது. இது தொடர்பாக ஜார்கண்டில் ஜமாலுதீன் அன்சாரி என்ற இந்தி பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டார். குஜராத், ராஜஸ்தான், பீகார், டெல்லி மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள இதன் தொடர்பு சதித்திட்டத்தை சிபிஐ விசாரித்து வருகிறது.