நீட் வேண்டாம் என நீண்ட காலமாக தமிழ்நாடு கூறி வருவதாக, திமுக எம்.பி கனிமொழி கூறியுள்ளார். இது குறித்து ANI செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர், நீட் தேர்வு நேர்மையாக நடைபெறவில்லை என்பது தற்போது தெளிவாகியுள்ளதாகவும், நீட் தேர்வு வேண்டாமென தமிழ்நாடு மட்டும் கூறி வந்த நிலையில், தற்போது நாடே கூறுவதாகவும் தெரிவித்துள்ளார். நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது