‘நீ ஒரு பெண், உனக்கு எதுவும் தெரியாது’ என எம்.எல்.ஏ ரேகாதேவியைப் பார்த்து பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிதிஷிடம் இருந்து வெளிப்பட்ட வார்த்தைகள் வெறும் எதிர்க்கட்சிக்கு எதிரானவை அல்ல என்றும் ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்க மனப்பான்மையில் திளைத்துவரும் இந்திய சமூகத்தின் கோர முகத்தின் காட்சி எனவும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.