திருநெல்வேலி மருதகுளம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடையே நேற்று சாதிய மோதல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மாணவர்களிடையே சாதி ரீதியிலான பூசல்கள் இருந்து வந்துள்ள நிலையில் ஊர் பெயர் மற்றும் சாதி தொடர்பாக நேற்று மோதல் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பாக பிரிந்து கொண்டு மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இதில் 2 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.