நெல்லை மாவட்டம் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களில் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது..
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களில் இருந்து தாமிரபரணி பாசனத்தில் உள்ள கோடகன் கால்வாய் (கண்டியப்பேரிகுளம் வரை 5048 ஏக்கர்), பாளையங்கால்வாய் (தாமரைக்குளம் வரை 5974 ஏக்கர்) மற்றும் திருநெல்வேலி கால்வாய் (வண்ணான்பச்சேரிகுளம் வரை 4168 ஏக்கர்) ஆகிய மூன்று கால்வாய்களின் கீழ் உள்ள 15,190 ஏக்கர் நேரடி மற்றும் மறைமுக பாசனப்பரப்பு நிலங்களுக்கு கார்பருவசாகுபடிக்கு 19/6/2024 முதல் 02/10/2024 முடிய (106 நாட்கள்) தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.
இதன்மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் கோடகன்கால்வாய் (கண்டியப்பேரிகுளம் வரை 5048 ஏக்கர்) பாளையங்கால்வாய் (தாமரைக் குளம் வரை 5974 ஏக்கர்) மற்றும் திருநெல்வேலி கால்வாய் (வண்ணான்பச்சேரிகுளம் வரை 4168 ஏக்கர்) ஆகிய கால்வாய்களின் கீழ் உள்ள 15,190 ஏக்கர் நேரடி மற்றும் மறைமுக பாசனபரப்புகள் பாசன வசதி பெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.