நேபாளத்தில் கடந்த 10ஆண்டுகளில் மட்டும் பல்வேறு விமான விபத்துகள் (சுமார் 196 பேர் உயிரிழந்துள்ளனர்) நிகழ்ந்துள்ளன. இதற்கு மலைப்பாங்கான நிலப்பரப்பு, கணிக்க முடியாத வானிலை & தளர்வான விதிமுறைகள் என பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டில் விமானங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்றும், பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதில்லை எனவும் பராமரிப்பு வல்லுநர்கள் கூறுகின்றனர்.