மகளிர் டி20 ஆசிய கோப்பையின் லீக் சுற்றில் நேபாளத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 178 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகப்பட்சமாக ஷபாலி 81 ரன்கள் குவித்தார். மேலும், ஹேமலதா 47, ஜெமிமா 28*, சஞ்சனா 10, ரிச்சா 6* ரன்கள் எடுத்தனர். நேபாள பந்துவீச்சாளர்களில் சீதாராமன் 2 விக்கெட்டுகளையும், 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். முதல் இரண்டு லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய மகளிர் அணி ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.