நைஜீரியாவில் போர்னோ மாகாணத்தில் திருமண விழா, இறுதி ஊர்வலம், மருத்துவமனைகளை குறிவைத்து நடந்த தற்கொலை தாக்குதலில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், தற்கொலை படையை சேர்ந்த பெண்கள் உடலில் குண்டுகளை கட்டிக் கொண்டு பொதுமக்கள் கூட்டத்துக்குள் புகுந்து வெடிக்க செய்ததாக கூறப்படுகிறது. எனினும், இந்தத் தாக்குதல்களுக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.