முள்ளங்கி வளமான வைட்டமின் சி மூலம். இது உடலில் ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தை எதிர்த்து போராடும் ஆக்ஸிஜனேற்றியாகும். இதில் பொட்டாசியம், மெக்னீசியம், ஃபொலேட், கால்சியம் மற்றும் ரைபோஃப்ளேவின் ஆகியவை இந்த வேர் காய்கறிகளில் உள்ளன.
முள்ளங்கியில் இருக்கும் சல்போராபேன் ஆக்ஸிஜனேற்றி. இது ஐசோதியோசனேட் ஆகும். இது புற்றுநோய்களை தடுக்க கூடியது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியது. இது நீரிழிவு சிகிச்சை உதவும். செரிமான ஆரோக்கியத்தையும் எடை இழப்பையும் ஊக்குவிக்கும்.
எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
முள்ளங்கியில் அதிக அளவுள்ள வைட்டமின் C நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. இதை உணவில் சேர்த்து வர சளி இருமல் போன்ற பல உடல்நல பிரச்சனைகளை தடுக்கலாம். இது ஃப்ரீ ரேடிக்கல்களின் சேதத்திலிருந்து உடலை பாதுகாக்கிறது மற்றும் இளம் வயதிலேயே ஏற்படும் வயது முதிர்வையும் தடுக்கிறது.
செரிமானத்திற்கு நல்லது
முள்ளங்கியில் நிறைந்துள்ள நார்ச்சத்து செரிமான மண்டலத்திற்கு மிகவும் நல்லது. இது செரிமான செயல்முறையை மேம்படுத்தவும் மல இயக்கத்தை எளிதாக்கவும் உதவுகிறது. இதன் மூலம் உடல் பருமன், வாயு, குமட்டல் போன்ற பல பிரச்சனைகளை தடுக்கலாம்.
புற்று நோயை தடுக்கும்
முள்ளங்கியில் புற்றுநோயை எதிர்க்கும் பண்புகள் உள்ளன. இதில் உள்ள சேர்மங்கள் புற்றுநோய் மற்றும் கட்டிகளின் வளர்ச்சியை தடுக்கின்றன. இதை தினசரி உணவில் சேர்த்து வர ஒரு சில புற்று நோய்கள் வருவதற்கான வாய்ப்பை குறைக்கலாம்.
நீரேற்றமாக வைத்துக் கொள்ளும்
முள்ளங்கியில் நிறைந்துள்ள நீர்ச்சத்து உங்களை நாள் முழுவதும் நீரேற்றமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இதை சாலட் வடிவிலும் எடுத்துக் கொள்ளலாம். முள்ளங்கியை சாப்பிடும் பொழுது நீங்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்படலாம்.
இரத்தத்தை சுத்திகரிக்க உதவும்
வயிறு மற்றும் கல்லீரலின் ஆரோக்கியத்தை பராமரிக்க உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற வேண்டும். இதற்கு முள்ளங்கி போன்ற காய்கறிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது இரத்தத்தில் ஆக்ஸிஜன் விநியோகத்தை அதிகரித்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.