வாழைப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் வாழைப்பழம் சாப்பிட்டு தூக்கி வீசும் அதன் தோலில் ஏராளமான நன்மைகள் உள்ளது என்பது பலருக்குத் தெரியாது.
வாழைப்பழத்தில் தாதுக்கள், நார்சத்துக்கள், விட்டமின்கள், பொட்டாசியம் என பல சத்துக்கள் நிறைந்துள்ளது. அதேபோல வாழைப்பழம் சாப்பிட்டு நாம் வேண்டாம் என வீசும் தோலிலும் சத்துக்கள் உள்ளது. வாழைப்பழம் அளவுக்கு அதன் தோலும் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
வாழைப்பழத் தோலில் பாலிபினால்கள் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட் பண்புகள் அடங்கியுள்ளது. இவை நமது உடலில் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்ற உதவும். இதில் அழற்ச்சி எதிர்ப்பு பண்பும் உள்ளதால் தோலில் ஏற்படும் அரிப்பு, தடிமன் போன்றவற்றை சரி செய்யும். குறிப்பாக சோரியாசிஸ் எனப்படும் நாள்பட்ட தோல் நோய்க்கு சிறந்த மருந்தாக வாழைப்பழ தோல் அமைகிறது. சோரியாசிஸ் உள்ள இடத்தில் வாழைப்பழத் தோலை தேய்ப்பது மூலமாக அந்த இடத்திற்கு குளிர்ச்சியும் ஈரப்பதமும் கிடைக்கிறது.
வாழைப்பழத்தில் அதிகப்படியான ஆன்ட்டி ஆக்சிடென்ட் உள்ளதால் மீண்டும் சொரியாசிஸ் வராமல் தடுக்கலாம். வாழைப்பழத் தோலில் உள்ள கலவைகள் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடும் என ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகிறது.
கண் வீக்கம் அல்லது வலி இருந்தால், கண்களை மூடி, அதன் மேல் வாழைப்பழத் தோலை வைத்துக்கொண்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும். வாழைப்பழத் தோலில் உள்ள விசேஷ பண்புகள், கண்களுக்கு பல நன்மைகளை தர வல்லவை. தொடர்ச்சியாக நீண்ட நேரத்திற்கு கம்பியூட்டரில் பணி புரிபவர்கள் இரவு தூங்கும் முன் கண்களை மூடிக்கொண்டு வாழைப்பழத் தோலை கண்களில் வைத்தால், கண்களில் ஏற்பட்டுள்ள சோர்வு நீங்கும்.
வாழைப்பழ தோலை தினமும் பற்களில் தேய்த்து வந்தால் மஞ்சள் கரை நீங்கும், பல் ஆரோக்கியமும் மேம்படும்.
வாழைப்பழத் தோலைக் கொண்டு இரவு நேரத்தில் மரு இருக்கும் இடங்களில் நன்றாக தேய்க்க வேண்டும். இதை ஒரு வாரத்திற்கு தொடர்ந்து செய்து வந்தால் மருக்கள் நீங்குவதோடு, புதிதாக மருக்களும் உருவாகாமல் இருக்கும்.