குஜராத்தை பூர்வீகமாக கொண்ட தொழிலதிபர் ஷிவானி ராஜா (29), பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில், பகவத் கீதை சாட்சியாக எம்பியாக பதவியேற்ற வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், கீதையின் சாட்சியாக மன்னர் சார்லஸ்க்கு தனது விசுவாசத்தை சத்தியம் செய்வதில் பெருமைப்படுவதாக பதிவிட்டுள்ளார்.