விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது லாரி மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். தென்காசி மேலநீதிநல்லூரை சேர்ந்த 50 பக்தர்கள் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றுகொண்டிருந்தனர். நேற்று மாலை கோவில்பட்டி வழியாக என்.சுப்பையாபுரம் விலக்கு அருகே மதுரை நோக்கி சென்ற லாரி பக்தர்கள் கூட்டத்தில் புகுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.