தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தைத் தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் மில்கி மிஸ்ட் டெய்ரி நிறுவனம், பால் சந்தையில் முன்னணி நிறுவனமாக வளர்ந்து வருகிறது. பன்னீர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல்வேறு பால் பொருள்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த சூழலில், இந்நிறுவனம் பங்குச்சந்தையில் தோராயமாக ₹20,000 கோடிக்கு பொது பங்குகளை (IPO) வெளியிடவுள்ளதாகக் கூறப்படுகிறது.