பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் மொகிந்தர் பகத் அபார வெற்றி பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சுரிந்தர் கவுர், பாஜக வேட்பாளர் ஷீடல் அங்கூரலை பின்னுக்கு தள்ளி 37,235 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றுள்ளார். மொத்தம் அங்கு 94,609 வாக்குகள் பதிவான நிலையில், மொகிந்தர் பகத் 55,246 (58.39%) வாக்குகள் பெற்றுள்ளார்.