இந்தியாவின் பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரிசர்வ் வங்கி 1.3 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. KYC இணைப்பு, கடன் உதவி மற்றும் முன் தொகை தொடர்பாக ரிசர்வ் வங்கி பிறப்பித்திருந்த உத்தரவை பஞ்சாப் நேஷனல் வங்கி பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து அந்த வங்கியிடம் ரிசர்வ் வங்கி விளக்கம் கேட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது