மத்திய பட்ஜெட் பெரிய அளவில் ஏமாற்றம் அளிப்பதாக திமுக எம்பி திருச்சி சிவா கூறியுள்ளார். பட்ஜெட்டில் தமிழகம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக விமர்சித்த அவர், தமிழகத்துக்கு என எந்த ஒரு நிதியும் ஒதுக்காதது ஆச்சரியம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். பிஹார், ஆந்திராவுக்கு நிதி ஒதுக்கியதை எதிர்க்கவில்லை என்றும், ஆனால் தமிழகத்துக்கு நிதி ஒதுக்காததை ஏற்க முடியாது எனவும் விமர்சித்துள்ளார்.