நாடாளுமன்றத்தில் வருகிற 23ஆம் தேதி மத்திய பாஜக கூட்டணி அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். மக்களவை தேர்தலுக்குப் பிறகு தாக்கலாகும் முதல் பட்ஜெட் இது என்பதால் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் வருமான வரிக்கு கடைபிடிக்கப்படும் புதிய வரி விதிப்பில் சலுகைகளை அறிவித்து மத்திய அரசு நிவாரணம் அளிக்குமா என நடுத்தர வர்க்கத்தினரும், வரி செலுத்துவோரும் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.