மக்களவையில் ரயில்வே துறைக்கான வரவு செலவு அறிக்கையின் மீது மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் பேசினார். அப்போது, “ஒரு காலத்தில் ரயில்வேக்கு என்று தனி பட்ஜெட் இருந்தது. நாடும், நாடாளுமன்றமும் அதைப்பற்றி விவாதித்தன. அரசாங்கங்கள் பட்ஜெட்டில் சில துறைகளுக்கான நிதியை ஒழித்துக்கட்டும். ஆனால், ஒரு பட்ஜெட்டையே ஒழித்துக்கட்டிய பெருமை பாஜகவையே சாரும்.” என்று சாடினார்.