மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த பட்ஜெட் குறித்து பொருளாதார நிபுணர்கள், அரசியல்வாதிகள் உள்பட பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் 2024-25ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் பல்வேறு பொருள்களுக்கு சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால், என்னென்ன பொருள்கள் விலை உயர்கிறது என்பதை காணலாம். சோலார் பேனல் செய்வதற்கான கண்ணாடிகள் விலை 10%, தொலைத்தொடர்பு துறை உபகரணங்கள் 15%, அமோனியம் நைட்ரேட் 10%, பிவிசி 25%, முந்திரி உள்ளிட்டவைகள், பாக்கு வகைகள், ஆய்வக ரசாயனங்கள் 150% வரை விலை உயர உள்ளன.