மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இந்நிலையில் பட்ஜெட் உரையில் தமிழ்நாடு என்ற வார்த்தையே இடம்பெறவில்லை என சர்ச்சை வெடித்துள்ளது. இதையடுத்து மத்திய பட்ஜெட் உரையில் மாநிலங்களின் பெயர்கள் எத்தனை முறை இடம்பெற்றுள்ளன என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஆந்திரா- 5, பீகார்- 5, அசாம்- 2, மேற்கு வங்கம்- 1, தமிழ்நாடு, கேரளா, உ.பி, டெல்லி, பஞ்சாப், கர்நாடகா, மணிப்பூர் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களின் பெயர் ஒரு முறை கூட இடம்பெறவில்லை.