விவேக் தேவ்ராய் (நிதி ஆயோக் குழு உறுப்பினர்) குழு அளித்த பரிந்துரைபடியே 2 பட்ஜெட்டுகளும் ஒன்றாக சேர்க்கப்பட்டது. பொது பட்ஜெட், ரயில்வே பட்ஜெட் எனத் தனியே நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளாமல் மத்திய அரசிடம் இருக்கும் நிதியை ஒரே அளவில் பயன்படுத்துவது, சாலை, ரயில், நீர்வழித்தடம் ஆகியவை இணைந்த பலமுனை போக்குவரத்தை ஏற்படுத்துவது உள்ளிட்டவையே 2 பட்ஜெட்டுகளும் இணைக்கப்பட்டற்கு முக்கிய காரணமாகும்.