விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்தூர் பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் மூன்று அறைகள் சேதம் அடைந்த நிலையில் மீட்பு பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். விபத்தின் போது எத்தனை பணியாளர்கள் பணியில் இருந்தனர் வேறு யாராவது உயிரிழந்து உள்ளனரா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.