சிவகாசி அடுத்த காளையார் குறிச்சியில் உள்ள சுப்ரீம் பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட வெடிபவத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்த நிலையில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவரும் தற்போது உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து படுகாயம் அடைந்த இரண்டு பெண் தொழிலாளர்கள் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.