பட்டாசு தொழிலை காக்க விரைவில் எனது தலைமையில் தொழிலாளர்களுடன் சேர்ந்து, பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். மேலும் அவர், தற்போது பட்டாசு ஆலைகளில் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களை போல ஓடி ஒளியும் நிலை உள்ளது. பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.