உத்திரபிரதேச மாநிலத்தில் 15 வயது பட்டியலின வகுப்பை சேர்ந்த சிறுவனை அடித்து சிறுநீரை குடிக்க வைத்த வீடியோ எடுத்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். சிறுவனின் குடும்பத்தினர் அப்பகுதியில் சவுண்ட் சிஸ்டம் அமைக்கும் பணி செய்து வருவதாக கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரின் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் சிறுவனின் குடும்பத்தார் அதிக பணம் வசூலித்ததாக கூறி இந்த கொடூரத்தை அரங்கேற்றியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.