தமாகா இளைஞரணி தலைவர் யுவராஜா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியில் தமாகா மூன்று தொகுதிகளில் போட்டியிட்டு மூன்றிலும் படுதோல்வி அடைந்தது. தோல்விக்கான காரணம் குறித்து செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில் தோல்விக்கு பொறுப்பேற்ற யுவராஜா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான கடிதத்தையும் ஜிகே வாசனிடம் வழங்கியுள்ளார்.