தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான இடம் மாறுதல் கலந்தாய்வில் பதவி உயர்வு இடமாறுதல் வழங்கப்படாததால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பொது மாறுதல் கலந்தாய்வுக்கான அட்டவணை நேற்று முன் தினம் வெளியிடப்பட்ட நிலையில் இதில் இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் ஆகவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாகவும் பதவி உயர்வு வழங்குவதற்கான கலந்தாய்வு இடம்பெறவில்லை என்று ஆசிரியர்கள் குமுறுகின்றனர்.