தமிழகத்தின் ஆனி மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினமான இன்று அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் பத்திரப்பதிவுக்காக கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும் இரண்டு சார் பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 200 க்கு பதிலாக 300 முன் பதிவு டோக்கன்களும் ஒதுக்கப்பட உள்ளது.