இயற்கை விவசாயி கமலா பூஜாரி மறைவுக்கு, பிரதமர் மோடி உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், “திருமதி கமலா பூஜாரியின் மறைவுச் செய்தி கேட்டு வருந்துகிறேன். விவசாயத் துறையில், குறிப்பாக இயற்கை விவசாய முறைகளை ஊக்குவிப்பதிலும், உள்நாட்டு விதைகளைப் பாதுகாப்பதிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார். நீடித்த வளர்ச்சி மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு துறையில் அவர் ஆற்றிய பணிகள் எப்போதும் நினைவுகூரப்படும். பழங்குடி சமூகத்தை மேம்படுத்தும் துறையில் அவர் ஒரு சிறந்தவராக இருந்தார். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் அனுதாபங்கள். ஓ அமைதி” என பதிவிட்டுள்ளார்..
ஒடிஷா மாநிலம் கோராபுட் மாவட்டத்திலுள்ள பத்ராபுட் கிராமத்தைச் சேர்ந்த கமலா பூஜாரி, 100 வகையான அரிசிகளை அறுவடை செய்தவர். இயற்கை விவசாயத்தில் அவர் செய்த அரிய சாதனையை பாராட்டி, 2019ஆம் ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை அவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.