நாடு முழுவதும் இந்தாண்டு இதுவரை பன்றி காய்ச்சலுக்கு 150 பேர் பலியாகி உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தேசிய சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவர அறிக்கையில், கடந்த ஜூன் 30-ம் தேதி வரை 7215 பேருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகபட்சமாக பஞ்சாபில் 41 பேரும் அதற்கு அடுத்ததாக குஜராத்தில் 26 பேரும் மகாராஷ்டிராவில் 16 பேரும் உயிரிழந்து உள்ளதாக தரவுகள் கூறுகின்றன.