மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் நாக்பூர் விரைவு சாலையில் இன்று நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர விபத்தில் ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தவறான திசையில் கார் சென்றதால் இந்த விபத்து நடந்ததாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.