ரயில் பயணிகளின் பாதுகாப்பை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என மத்திய இணையமைச்சர் சோமண்ணா அறிவுறுத்தியுள்ளார். தமிழகம், கேரளா, ஆந்திரா & கர்நாடகத்தின் சில பகுதிகள் வரை வியாபித்துள்ள தெற்கு ரயில்வேயின் நிர்வாக செயல்பாடு சிறப்பாக உள்ளதாகப் பாராட்டிய அவர், இங்கு அமிரித் பாரத் திட்டத்தின் கீழ் உள்கட்டமைப்பு & ரயில் நிலைய மேம்பாடு திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.