இந்தியாவில் மிகவும் பிரபலமான திலாப்பியா மீனை சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இதை தொடர்ந்து, உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திலாப்பியா மீனை உட்கொள்வதால் புற்றுநோய் வரும் என்பது வதந்தி என விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் திலாப்பியா மீன், ‘ஜிலேபி மீன்’ என்று அழைக்கப்படுகிறது.