இந்தியாவில் மிகவும் பிரபலமான திலாபியா மீனை சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதைத்தொடர்ந்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திலாபியா மீனை உட்கொள்வதால் புற்றுநோய் வரும் என்பது வதந்தி என விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் இந்த வகை மீனிலே ஜிலேபி மீன் என்று அழைக்கப்படுகிறது.