கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரண விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுக்க தவறியதாக திமுக அரசைக் கண்டித்து அதிமுகவினர் சென்னையில் இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து அதிமுக எம்எல்ஏக்களும் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் இபிஎஸ் தனது எக்ஸ் பதிவில், “கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து எனது தலைமையிலான கழக சட்டமன்ற உறுப்பினர்கள் நேர்மையான விவாதம் நடத்த பல முறை சட்டமன்றத்தில் முயன்றும் விடியா திமுக முதல்வர் தயங்குவது ஏன்? கள்ளச்சாராய மரணங்கள் 60-ஐ தாண்டியுள்ள நிலையில், இன்றுவரை கள்ளக்குறிச்சி சென்று மக்களை சந்திக்காதது ஏன்? #பயமா_ஸ்டாலின் ? கள்ளச்சாராய மரணங்கள் குறித்து CBI விசாரிப்பதோடு, இதற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் உடனடியாக பதவிவிலக வேண்டும்!” என தெரிவித்துள்ளார்.