இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பதவியேற்றால் இந்தியா நிச்சயம் உலகக் கோப்பையை வெல்லும் என்று துரோணாச்சார்யா விருது பெற்ற பயிற்சியாளர் சஞ்சய் பரத்வாஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்திய அணிக்குள் இருக்கும் திறமையை கம்பீர் சரியாக வெளிக்கொண்டு வந்து புதிய உத்வேகத்தை அளிப்பார் எனக் கூறிய அவர், தனது மாணவன் ஒருவர் அணிக்கு பயிற்சியாளரானால் அது தனக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கும் என்றார்.