இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீரை கடந்த வாரம் தேர்வு செய்தது பிசிசிஐ. இதனையடுத்து அப்பொறுப்பினை அவர் ஏற்றுக் கொண்டதாக அறிவித்து பிசிசிஐ வீடியோ வெளியிட்டுள்ளது. ஜூலை 27ஆம் தேதி தொடங்கும் இலங்கைக்கு எதிரான தொடருக்காக இந்திய வீரர்கள் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு தன்னுடைய ஆலோசனைகளை கம்பீர் வழங்கி வருகிறார்.