திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பரண்மேல் ஆடு வளா்ப்பு பயிற்சி அண்மையில் நடைபெற்றது. நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் பெரியார் ராமசாமி தலைமை வகித்தார். மன்னார்குடி கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். முத்துப்பேட்டை கால்நடை மருத்துவர், பயிற்சி ஒருங்கிணைப்பாளர், கால்நடை மருத்துவர் உள்ளிட்டோர் ஆடு வளர்ப்பு குறித்து பல்வேறு தலைப்புகளில் பேசினர். இதில் 57 விவசாயிகள் பங்கேற்று பயன்பெற்றனர்.