.சிவகங்கை யூனியன் அலுவலகத்தில் உதவி பொறியாளரை தாக்க முயன்ற திமுக நிர்வாகி முருகன் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். முடிக்கப்பட்ட ஒப்பந்த பணிக்கு, பில் தொகையை கேட்க சென்ற போது, ஏற்பட்ட வாக்குவாதத்தில் முருகன், உதவி பொறியாளரை நாற்காலியை கொண்டு தாக்க முயன்றார். இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், தற்போது போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.