ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் வாக்குவாதத்தின் போது CISF ஜவானை அறைந்ததற்காக ஸ்பைஸ்ஜெட் ஊழியர் கைது செய்யப்பட்டார்.
ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனை தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சப் இன்ஸ்பெக்டரின் கன்னத்தில் ஸ்பைஸ்ஜெட் பெண் ஊழியர் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். இதனிடையே, சப் இன்ஸ்பெக்டர் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் உணவு மேற்பார்வையாளரான அனுராதா ராணி, “வாகன கேட்” வழியாக விமான நிலையத்திற்குள் நுழைந்து கொண்டிருந்தபோது, உதவி சப் இன்ஸ்பெக்டர் கிரிராஜ் பிரசாத் அவரை தடுத்து நிறுத்தியதால் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.