சேலம் கோட்டத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் எர்ணாகுளம்-பெங்களூரு இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் கோவை செல்லாமல் போத்தனூர், இருகூர் வழியாக செல்லும் என சேலம் ரயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலும் எர்ணாகுளம்- கே.எஸ்.ஆர். பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலும் நாளை முதல் வருகிற ஜூலை 30ஆம் தேதி வரை கோவை ஜங்ஷன் செல்லாமல் போத்தனூர், இருகூர் வழியாக செல்லும்.