பருப்பு, பாமாயில் வழங்கும் திட்டத்தை அரசு நிறுத்தக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை ஒரு தரப்பினருக்கு நிறுத்தவும், மீதமுள்ளவர்களுக்கு விலையை உயர்த்தவும் தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. ஏழைகள் வயிற்றில் மீண்டும், மீண்டும் அடிக்கக் கூடாது. மக்களின் குறைகளை போக்குவது தான் அரசின் கடமை என கூறியுள்ளார்.