ஹத்ராஸில் உயிரிழந்த 121 அப்பாவிகளும் கர்மாவால் உயிரிழக்கவில்லை என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது X பக்கத்தில், “கடவுளால் அனுப்பப்பட்டவை என்று இந்த உலகில் எதுவும் இல்லை என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன். இந்த அசம்பாவிதத்திற்கு காரணமானவர்கள் ஒவ்வொருவரும் கைது செய்யப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும். கண்மூடித்தனமான நம்பிக்கை வேண்டாம்” எனப் பதிவிட்டுள்ளார்