ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான வெற்றி மிகப் பெரிய மகிழ்ச்சியை தருவதாக ஆட்ட நாயகன் விருதை வென்ற ஆஃப்கன் வீரர் குல்புதீன் நயிப் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணியை வெற்றிக்கொள்ள வேண்டும் என்ற இந்த தருணத்திற்காகத்தான் பல ஆண்டுகளாக காத்திருந்துள்ளதாக கூறிய அவர், ஆஃப்கன் நாட்டிற்கு இது பெருமைமிகு தருணம் என்றார். இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய அவர், ஆஸி.,அணியின் 4 விக்கெட்டை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
2024 டி20 உலக கோப்பை சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி ஆஃப்கன் அணி அபார வெற்றி பெற்றது. கிங்டவுனில் நடைபெற்ற போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, 148/6 ரன்கள் எடுத்தது. பின்னர் 149 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியை, ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் திணறடித்தனர். இதனால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி, 19.2 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.